கள்ளச்சந்தையில் காஸ் சிலிண்டர்கள் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில்  கைது
BY NEWS TODAY
12 Mar 2026
0
பகிர்

ஈரான் அமெரிக்கா போரை அடுத்து தற்போது கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளச் சந்தையில் பதுக்கள் இருக்கலாம் என

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

 இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் எஸ் பி சீனிவாச பெருமாள் ஆலோசனையின் பேரில் டிஎஸ்பி சிவகுமார், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மதுரை கோவில்பாப்பாக்குடி மற்றும் ஆனந்தம் நகர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

கோவில்பாப்பாக்குடியைச் சேர்ந்த பழனி என்பவரின் வீட்டருகே இருந்த காலி இடத்தில் 100 மானிய விலை வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் மற்றும் 109 வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் என மொத்தம் 209 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனந்தம் நகரைச் சேர்ந்த மதன்குமார் என்பவரின் வீட்டில் இருந்து 63 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 126 வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் என மொத்தம் 189 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில் மொத்தம் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பழனி (46) மற்றும் மதன்குமார் (27) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யவும், இவர்கள் இருவரையும் கள்ளச்சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மதுரை கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மானிய விலை சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மதுரை மாவட்டத்தில்தான் இந்த கடுமையான கள்ளச்சந்தை தடுப்புக் காவல் சட்டம் (குண்டர் சட்டம்) பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மானிய விலை சிலிண்டர்களை பதுக்குவோர் மீது இத்தகைய கடுமையான நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்