19
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அதிமுகவில் இணைந்தார் நாம் தமிழர் கட்சி காளியம்மாள்.
BY NEWS TODAY
13 Mar 2026
0
பகிர்

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.

 சீமானுடன் கருத்து மோதலால் வெளியே வந்தவர் 


நாம் தமிழர் கட்சியின் (NTK) மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2025 பிப்ரவரியில் அக்கட்சியிலிருந்து விலகினார். அதிரடி பேச்சாளரான இவர் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சீமானுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக, பிப்ரவரி 2025-ல் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.

 இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருக்குக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு மற்றும் 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்