19
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
IAS தேர்வில் கைக்குழந்தையுடன் சாதனை படைத்த டாக்டர்.எம்.ரேஷ்மா.
BY NEWS TODAY
13 Mar 2026
0
பகிர்


சாதனை வெற்றியை சாத்தியப்படுத்திய 

வெற்றியாளர் 

 டாக்டர்.எம்.ரேஷ்மா.


 ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியினர் பாராட்டு 

 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 773 ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளவர் ஒரு குழந்தைக்கு தாயானவர் டாக்டர் எம்.ரேஷ்மா.

போட்டித்தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு அவரது இடைவிடாத போராட்டத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம்.

தனது எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பை முடித்துக்கொண்டு 

 2019 -20ஆம் ஆண்டு முதல் தனது குடிமைப் பணித் தேர்வுக்கான தயாரிப்புகளை தொடங்குகிறார் டாக்டர் ரேஷ்மா.

அவரது தந்தையார் மகேஷ்வரன் பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரி. தனது மகளின் லட்சியக் கனவுக்கு உதவுகின்ற சேவகனாகவே இன்றும் ரேஷ்மாவைப் போலவே கண்ணுறக்கம் இன்றி உழைப்பவர். இடையில் டாக்டர் ரேஷ்மாவிற்கு திருமணமும் நடைபெறுகிறது. அவரது லட்சியக் கனவுக்கு ஊக்கம் தருகின்ற கணவராக டாக்டர் கார்த்திக் ஜோதி அமைந்தது மற்றொரு அதிர்ஷ்டமும் பலமும் ஆகும். பிறகு குழந்தை பெற்றெடுத்தார். இவ்வாறு அடுக்கடுக்காக வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒருபுறம் நடந்தாலும் மறுபுறம் டாக்டர் ரேஷ்மா கைக்குழந்தையை சுமந்து கொண்டே தேர்வினை எழுதுகிறார். சில முயற்சிகளின் பின்னடைவுக்குப் பிறகு 2024 ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வும் எழுதுகிறார். 2025-ம் ஆண்டு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வருகிறது. கைக்குழந்தையோடு டெல்லி செல்கிறார். 10 மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பு நழுவுகிறது. சோர்ந்துவிடவில்லை அவர். மீண்டும் 2025-ம் ஆண்டு 

முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் வென்று நேர்முகத் தேர்வுவரை சென்று தனது விடாமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் போராடி சாதனை வெற்றியைப் படைத்து தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார் டாக்டர் ரேஷ்மா. 

டாக்டர் ரேஷ்மாவுக்கு ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி ஐஏஎஸ் தேர்வுக்கான வழிகாட்டுதலை வழங்கியது. இது ஒரு ஆர்வம் மை ஐஸ் அகாடமி நிறுவனர் சிபி குமரன் கூறுகையில், அவருக்கு போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதலுக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமையாக நினைக்கிறோம். அவரது தோல்வியிலும் வெற்றியிலும் துணை நின்றதில் பெருமை கொள்கிறது ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி. ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் நம்பிக்கையை உண்மையாக்கிய உழைப்புக்குரியவர் டாக்டர் ரேஷ்மா ஆவார் என்றார்.

 ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் ரேஷ்மா தனது குடும்பத்தினருடன் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமிக்கு வருகை தந்தார். அவரை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் கடந்த ஆண்டின் ஐஏஎஸ் தேர்வின் சாதனை வெற்றியாளர் ஆர்.தமிழரசி, IRS, அகாடமியின் மூத்த பயிற்சியாளர்கள் எம்.நந்தக்குமார் , கே.நவீன் , டி.புவனேஷ்வரன் ஆகியோர் வாழ்த்தினர். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்