19
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமை தமிழகத்தின் அவலம்
BY NEWS TODAY
13 Mar 2026
0
பகிர்

சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமை இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படப் போகிறார்களோ? – சீமான் அச்சம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு...

பள்ளி சிறுமிகள் முதல், 80 வயது பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெருந்துயரங்கள் தமிழகத்தில் நாளும் அரங்கேறுகின்றன. திமுக அரசின் தொடர் அலட்சியமே ஏராளமான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்ததற்கு காரணமாகும். திமுக ஆட்சி முடிவதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட போகிறார்களோ என்ற பேரச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மதுவை விற்கும் அரசால் குற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்பட்டு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப் போகிறது? பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அதற்காக உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்