அடித்தட்டு மக்களுக்காக சேவை ஆற்றியவர் மகா பெரியவர்
BY NEWS TODAY
15 Mar 2026
0
பகிர்

அடித்தட்டு மக்களுக்காக சேவை ஆற்றியவர் மகா பெரியவர் 

மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் புகழாரம்,!!


அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றியவர் மகா பெரியவர் என்று காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழாவில் பிரபல மிருதங்க வித்வான் கலைமாமணி திருவாரூர் பக்தவத்சலம் புகழாரம் சூட்டினார்.


பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் சபரிமலை ஐயப்பன் 18 படி பூஜை மற்றும் சுவாமி ஐயப்பன் விக்ரகத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் புஷ்பாஞ்சலி ஆகியவற்றை சந்தோஷ சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர். 

பின்னர், கலைமாமணி திருவாரூர் பக்தவத்சலம் குழுவினரின் சிறப்பு கர்நாடக இசை நடைபெற்றது. ரவி கிரண் பாட்டு, பெங்களூர் கார்த்திக் வயலின் வாசித்தனர். 

 நிகழ்வில், கர்நாடக இசைக் கலைஞர்கள் ரவி கிரண், பாரதி மஹாதேவன், வேத விற்பன்னர் பாஸ்கர வாத்யார் ஆகியோருக்கு ஸ்ரீ மகா பெரியவா விருதினை கலைமாமணி திருவாரூர் பக்தவச்சலம் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது 

காஞ்சி மடத்தின் மேன்மையினை மகா பெரியவா தொட்டு ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி அதன் பிறகு இப்போது பிடாதிபதியாக இருக்கும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அற்புதமாக செய்து வருகிறார்.

வேதமும் சங்கீதமும் வேறு வேறு அல்ல. சங்கீதத்தில் தக திமி என்கிற சொல் வேதத்தில் உள்ளது.

 நான்கு வேதங்களில் இருந்துதான் சொல்கட்டு வருகிறது. அந்த சொல் கட்டில் இருந்து தான் சங்கீதம் வருகிறது. கோபுரங்கள் நான்கு நாயன்மார்கள் நான்கு என நான்கு, நான்கு என்று கூறிக் கொண்டே போகலாம். 

நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு அற்புதமான சன்னியாசி காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர். சொல்லும் செயலும் ஒன்றுபட்ட ஒரு சந்நியாசியை இனிமேல் நாம் பார்க்க முடியாது. வேதம் தழைப்பதற்காக அரும்பாடு பட்டவர்.

இசை கலைஞர்களை கௌரவம் செய்தவர். அவர் போதித்த உபதேசங்கள் இன்று மட்டுமல்ல காலம் உள்ளவரை எல்லோருக்கும் பயன்படும். வேதத்தை மட்டுமன்றி வேத விற்பன்னர்களையும் அவர் கௌரவித்தார். அவரை தொடர்ந்து ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார்.  இன்று காஞ்சி மடத்தின் பிடாதிபதியாக இருந்து 58 வது ஜெயந்தி விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மடத்தின் மறுமலர்ச்சிக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வருகிறார்.. இது போன்ற மகனியர்களின் உபதேசங்களை நாம் கேட்பது மட்டுமின்றி பின்பற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.

நிகழ்ச்சிக்கான அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.


•••••••••

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்