ஹோட்டல்களில் எரிவாயு கட்டணம் வசூலிக்கக் கூடாது
BY NEWS TODAY
26 Mar 2026
0
பகிர்

ஹோட்டல்களில் எரிவாயு கட்டணம் வசூல் கூடாது. 

 மத்திய அரசு அறிவிப்பு


ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உணவுக் கட்டணத்தில் எல்பிஜி கட்டணம், கேஸ் சர்சார்ஜ் அல்லது எரிபொருள் செலவை கூடுதலாக வசூலிக்க கூடாது என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

மெனு விலையே இறுதி விலையாக இருக்க வேண்டும். அதற்கு வரிகள் மட்டும் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

 எரிபொருளுக்கு என கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால், அதனை நீக்குமாறு உணவகத்திடம் நுகர்வோர் கேட்க வேண்டும் என்றும், மீறி வசூலித்தால் புகார் தெரிவிக்க 'நுகர்வோர் ஹெல்ப்லைன் 1915-ஐ அழைக்கலாம் அல்லது NCH செயலியை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், E-Jagriti மூலம் புகார் அளிக்கலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அல்லது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு தகவல் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்