16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைப்பு
BY NEWS TODAY
27 Mar 2026
0
பகிர்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைப்பு

 விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை


ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

லிட்டருக்கு ரூ.13ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3ஆக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லால் வரி நீக்கத்தால் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல் - டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை; அதே நேரம் இது விலை உயர்வை தடுக்கும் நடவடிக்கையாகும்.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதை தடுக்கும் முயற்சியாக இந்த கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.

 ஈரான் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் டீசலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி உள்ளது.

 ஆனால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படுகிறார் என்பது தெரிகிறது. மக்கள் மீது சுமையை ஏற்படுத்தாமல் சீரான விநியோகம் நடைபெற வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தியுள்ளார்.

 அதன் விளைவாக டீசல் உயர்வு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்