16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
200 தொகுதிகளைத் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
BY NEWS TODAY
10 Jan 2026
0
பகிர்

சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளைத் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



சென்னை கொளத்தூர் தொகுதியில் பொங்கல் விழா இன்று (ஜனவரி 10) நடபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசுகையில், " தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை எழுச்சியோடு கொண்டாடும் இந்தச் சிறப்பான நேரத்தில், உங்களை எல்லாம் நான் சந்தித்து, நம் கொளத்தூர் தொகுதியில் இருக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு முன் கூட்டியே கிடைத்துள்ளது.



என்ன தான் நான் முதலமைச்சராக இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, பல்வேறு மாவட்டங்களில் நடைபெறக்கூடிய அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, கழக நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அல்லது பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நேரத்தில் என்ன மகிழ்ச்சி அடைகிறேனோ, பெருமை அடைகிறேனோ, அதைவிட கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அதில் ஒரு வேகமும், ஒரு எனர்ஜியும் எனக்கு வந்துவிடுகிறது. அந்த எனர்ஜியோடுதான் உங்கள் முன் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.



நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை எல்லாம் செயல்படுத்தியிருக்கிறது என்பதை உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீங்கள் அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பொங்கல் விழாவை எழுச்சியோடு கூட்டி உங்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீதத்தை முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவீதம் பாக்கி உள்ளது. இன்று பல்வேறு கட்சியினர், ஏன் பாஜகவில் இருக்கக்கூடியவர்கள் கூட திமுக காரன் மாதிரி யாரும் வேலை செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.



நாம் இப்போது ஆற்றியிருக்கக்கூடிய பணிகளை எல்லாம் பார்க்கும்போது, 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. அந்த நம்பிக்கையோடு பொங்கல் விழாவை நாம் கொண்டாடுகிறோம். வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற உறுதியேற்போம், சபதமேற்போம்" என்றார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்