16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
மும்பை வர்றேன் காலை வெட்டுங்க பார்க்கலாம்.. உத்தவ் சிவசேனாவுக்கு அண்ணாமலை சவால்!
BY NEWS TODAY
12 Jan 2026
0
பகிர்

மும்பைக்குள் நுழைந்தால் தமது காலை வெட்டுவோம் என உத்தவ் தாக்கரே சிவசேனா விடுத்துள்ள மிரட்டலுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.



மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் ஜனவரி 15-ம்  தேதி நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மாநில முன்னாள் மாநில தலைவர்  அண்ணாமலை பிரசாரம் செய்தார். அந்த பிரசாரத்தின் போது,  மும்பை மகாராஷ்டிராவின் ஒரு பகுதி அல்ல. மும்பை ஒரு சர்வதேச நகரம் என்று பேசினார். அவரின்  இந்த பேச்சுமகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மும்பையில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசினார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று  பேசினார். அத்துடன்  உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், மும்பை மாநகருக்குள் அண்ணாமலை கால் வைத்தால் காலை வெட்டுவோம் என எழுதியிருந்தனர்.



இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், , "மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவதாகவும், மேலே மை அடிப்பதாகவும் மிரட்டலுடன் சிவசேனா பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன். முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். மை  அடித்துப் பாருங்கள். மிரட்டல், உருட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். மும்பை உலகத்தின் தலைநகர் என்று சொல்லும் போது அது மராட்டியர்களால் கட்டிய நகரம் இல்லை என்று ஆகிவிடுமா?" என்று தெரிவித்துள்ளார்.

 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்