16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
BY NEWS TODAY
13 Jan 2026
0
பகிர்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கி வருகிறது.  இதன் காரணமாக மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்குச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 



இந்த நிலையில், நெடுந்தீவு பகுதியில்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. ராமேஸ்வரம்  மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடைய செய்துள்ளது. கைது செய்யப்பட்ட  மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்