02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
‘பிஎம் கேர்ஸ்’ நிதி குறித்து இனி பேசக்கூடாது - பிரதமர் அலுவலகம் உத்தரவு
BY NEWS TODAY
10 Feb 2026
0
பகிர்

‘பிஎம் கேர்ஸ்’ நிதி உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப அனுமதி இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 



இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் நோக்கில் பிரதமர் தேசிய நிவாரண நிதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காக தேசிய பாதுகாப்பு நிதியும் இயங்கி வருகிறது. கடந்த 2020  மார்ச் 27-ம் தேதி கொரோனா போன்ற அவசர கால சூழல்களை எதிர்கொள்ள ‘பிஎம் கேர்ஸ்’ எனும் பெயரில் பொது அறக்கட்டளை தொடங்கப்பட்டது.



இந்த நிதியானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்போ அல்லது நாடாளுமன்ற சட்டத்தால் இயற்றப்பட்ட ஒன்றோ அல்ல என்பதால், இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றும் இதுதொடர்பாக சிஏஜி தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பிஎம் கேர்ஸ் நிதி, பிரதமர் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப அனுமதி இல்லை என்று பிரதமர் அலுவலகம் சார்பில் மக்களவை செயலகத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த ஜனவரி 30-ம் தேதி பிரதமர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், மக்களவை விதிமுறைகளின் கீழ் இந்த மூன்று நிதிகள் தொடர்பான கேள்விகள் மற்றும் விவகாரங்களை அனுமதிக்க முடியாது எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பூஜ்ஜிய நேரம் அல்லது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது இந்த நிதிகள் குறித்து தகவல் கோரப்பட்டால், இந்த விதிகளைப் பயன்படுத்தி அவற்றைத் தவிர்க்கலாம் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்