02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
வங்கதேச தேர்தலில் பிஎன்பி கட்சி அமோக வெற்றி
BY NEWS TODAY
13 Feb 2026
0
பகிர்

வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சி 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதனால் தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அத்துடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்த நிலையில், வஙகதேசத்தில் நேற்று (பிப்ரவரி 12) தேர்தல் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது. வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று நடந்த தேர்தலில் 1,755 வேட்பாளர்கள், 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் பிஎன்பி கட்சிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனாலும், பிஎன்பி. கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. 150 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் பிஎன்பி கட்சி அபார வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்