02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
மகாராஷ்டிரா அரசு அதிரடி - முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து
BY NEWS TODAY
18 Feb 2026
0
பகிர்

மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

மகாராஷ்டிராவில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய காங்கிரஸ்-என்சிபி கூட்டணி அரசு அவசரச் சட்டம் மூலம் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. மகாராஷ்டிராவில் தற்போதுபாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து மகாராஷ்டிரா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் அந்த அவசரச் சட்டம் காலாவதியானது. மேலும், மராத்தாக்களுக்கு 21 சதவீத மற்றும் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது, உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை மீறுவதாகக் கூறி மும்பை உயர்நீதிமன்றமும் இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.  

இந்நிலையில் நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த சட்ட ரீதியான இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்த இடஒதுக்கீடு இனி செல்லாது என்பதை மகாராஷ்டிரா அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி வர்ஷா கெய்க்வாட் கூறுகையில் "ஒருபுறம் அனைவருக்குமான வளர்ச்சி என்று பேசிக்கொண்டு, மறுபுறம் பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகளைப் பறிப்பது இந்த அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்