02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
நேபாளத்தில் அதிர்ச்சி... ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து 17 பேர் பலி
BY NEWS TODAY
23 Feb 2026
0
பகிர்

நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நேபாளத்தில் மேற்கு போகாராவில் இருந்து தலைநகர் காத்மாண்டுவிற்கு இன்று (பிப்ரவரி 23) அதிகாலை பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மத்திய மாவட்டமான தாடிங்களில் உள்ள திரிசூலி ஆற்றில் திடீரென பயணிகளுடன் கவிழ்ந்தது. 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்புபடையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் இருந்த 17 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் 27 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த பஸ்சில் 44 பேர் பயணம் செய்ததாக போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்து எப்படி ஏற்பட்டது என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்