‘தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் கட்சி பாஜக’ - அசாமில் பிரதமர் மோடி பேச்சு
BY NEWS TODAY
06 Apr 2026
0
பகிர்

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பர்பேட்டா நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இந்தியாவின் வளர்ச்சியில் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் கட்சி பாஜக. வளர்ச்சி அடைந்த அசாம் எனும் இலக்கோடு, வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் பெருங்கனவை நோக்கி நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். அதனால்தான், நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்துள்ளோம்.


கடந்த 10 ஆண்டுகள் அசாமை பல்வேறு சிரமங்களில் இருந்தும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தும் மீட்டெடுப்பதிற்கான ஆண்டுகளாக இருந்தன. இனி நாம் அசாமின் அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.


இன்று ஏப்ரல் 6-ம் தேதி, பாஜகவின் நிறுவன நாள். நாடு முழுவதும், உலகம் முழுவதும் உள்ள பாஜக குடும்பத்துடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்


தேசமே முதன்மையானது என்ற மந்திரத்தை முன்னிறுத்தி நாம் அனைவரும பாரத தாய்க்கு சேவையாற்றுவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். நடைபெற உள்ள இந்த தேர்தலில் பாஜக உங்கள் நல் வாழ்த்துகளை நாடி நிற்கிறது.


இம்முறை நீங்கள் அளிக்கும் வாக்கு, வளர்ந்த அசாம் மாநிலத்தை உருவாக்கும் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும். சொல்வதை அப்படியே பாஜக செய்து முடிக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அசாம் மக்கள் எத்தகைய உயரிய நிலைக்குத் தகுதியானவர்களோ அந்த நிலையை நோக்கி நாங்கள் அசாம் மாநிலத்தை வழிநடத்திச் செல்கிறோம் என தெரிவித்தார்.


அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

                   -மு.பழனிவேல்ராஜன்

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்