30 ஆயிரம் பேருக்கு உடனடியாக வேலை: புதுச்சேரியில் ராகுல் காந்தி உறுதி:
BY NEWS TODAY
06 Apr 2026
0
பகிர்

30 ஆயிரம் பேருக்கு உடனடியாக வேலை:

புதுச்சேரியில் ராகுல் காந்தி உறுதி:


வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை தரப்படும். 30 ஆயிரம் பேருக்கு உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரியில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். 


புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், எம்பியுமான ராகுல் இன்று பேசியதாவது: புதுச்சேரியை ஆட்சி செய்பவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல, எங்கோ இருந்து புதுவையை ஆட்சி செய்கின்றனர். இங்கு நடக்கும் ஆட்சி மக்களின் விருப்பத்தை செயல்படுத்தும் அரசு அல்ல, டெல்லியில் தங்கள் கருத்துக்களை திணிப்பவர்களின் கீழ் செயல்படும் அரசாக உள்ளது.


புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. உயிரோட்டமாக இருந்த தொழில்கள் நசிந்துவிட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் மூடப்பட்டுவிட்டன.


பாஜக அரசு அதானி அரசாக செயல்படுகிறது. காரைக்கால் துறைமுகம் ஏற்கெனவே அவருக்கு விற்கப்பட்டு விட்டது. புதுவையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மின்துறையும் அதானிக்கு விற்கப்பட்டு விடும். புதுவையில் போலி மருந்து தொழிற்சாலைகள் நடத்தப்பட்டு, போலி மருந்து உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ளது. இதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


புதுவை மக்கள்தான் இந்த அரசை ஆள வேண்டும். எனவேதான் மாநில அந்தஸ்து வேண்டும் என கூறுகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 6 மாதத்தில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அடுத்த தலைமுறை தலைவர்கள் உள்ளாட்சி தேர்தல் மூலம் அரசு நிர்வாகத்துக்கு வருவார்கள்.


சட்டப்பேரவைத் தேர்தலில் புதுவை மக்களின் குரல் மட்டுமே அரசில் ஒலிக்க வேண்டும், மக்களின் எண்ணங்கள் மட்டுமே அரசில் செயல்படுத்தப்பட வேண்டும். என் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி” என்று அவர் தெரிவித்தார்.

          -மு.பழனிவேல்ராஜன்



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்