16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
'ஜன நாயகன்' படத்திற்கு முட்டுக்கட்டை- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு
BY NEWS TODAY
10 Jan 2026
0
பகிர்

விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்தை வெளியிட  படத்தின் தயாரிப்பாளர், உச்சசநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



நடிகர் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில்  உருவான  'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர். 



இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்துக்கான தணிக்கை தொடர்பாக மறு விசாரணை குழுவினருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்காத நிலையில் சட்ட ரீதியாக அதனை எதிர்கொண்டு படத்தை வெளியிட சட்ட நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் நாளை மறுநாள் (ஜனவரி 12) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்