16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அமைச்சர் துரைமுருகன், கவிஞர் யுகபாரதிக்கு விருது- தமிழக அரசு அறிவிப்பு
BY NEWS TODAY
13 Jan 2026
0
பகிர்

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருதும், கவிஞர் யுகபாரதிக்கு பாரதிதாசன் விருதும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகள் இன்று (ஜனவரி 13) அறிவிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார் இதன் அடிப்படையில்,.



அய்யன் திருவள்ளுவர் விருது– மு.பெ.சத்தியவேல் முருகனார்

தந்தை பெரியார் விருது – வழக்கறிஞர் அ. அருள்மொழி

அண்ணல் அம்பேத்கர் விருது – சிந்தனைச் செல்வன்

பேரறிஞர் அண்ணா விருது – அமைச்சர் துரைமுருகன்

பெருந்தலைவர் காமராசர் விருது – எஸ்.எம்.இதயத்துல்லா

மகாகவி பாரதியார் விருது – நெல்லை ஜெயந்தா

பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் யுகபாரதி

தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது – வெ.இறையன்பு ஐஏஎஸ்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – சு.செல்லப்பா

முத்தமிழறிஞர் கலைஞர் விருது – விடுதலை விரும்பி.



விருதாளர் அனைவருக்கும் ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்க உள்ளார்.

 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்