16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
போகிப் பண்டிகை எதிரொலி: சென்னையில் விமானங்கள் ரத்து
BY NEWS TODAY
14 Jan 2026
0
பகிர்

சென்னையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 7 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.



இந்தியா முழுவதும்  போகிப் பண்டிகை (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தேவையில்லாத பொருட்களை தெருக்களில் போட்டு எரிப்பது வாடிக்கையாக உள்ளது. போகிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல்பஜார், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரித்ததால் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.அத்துடன் பனி மூட்டமும் சேர்வதால் விமான நிலைய ஓடுபாதையே தெரியாத அளவுக்கு மாறிவிடுவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 



இதன் காரணமாக சென்னையில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு மும்பை செல்லும் விமானம், காலை 8 மணிக்கு டெல்லி செல்லும் விமானம், அதிகாலை 3.05 மணிக்கு புனே செல்லும் விமானம், காலை 6.35 மணிக்கு கோவை செல்லும் விமானம் என 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு்ள்ளன. இதேபோல் சென்னைக்கு அதிகாலை 5.20 மணிக்கு வர வேண்டிய டெல்லி விமானம், காலை 6.35 மணிக்கு வரவேண்டிய மும்பை விமானம், காலை 7.10 மணிக்கு வரவேண்டிய புனே விமானம், காலை 9.10 மணிக்கு வரவேண்டிய கோவை விமானம் என 4 வருகை விமானங்களும் என 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 



அதேபோல் சென்னையில் இருந்து காலை 5.40 மணிக்கு விஜயவாடா செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 8.40 மணிக்கும், காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் 3 மணிநேரம் தாமதமாக காலை 9.05 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கு அபுதாபி செல்ல வேண்டிய ஏர் அரேபியா விமானம், அதிகாலை 3.50 மணிக்கும், பக்ரைன் செல்ல வேண்டிய கல்ப் விமானம் காலை 4.50 மணிக்கும், காலை 9.35 மணிக்கு மலேசியா செல்ல வேண்டிய ஏர் ஏசியா விமானம் காலை 10.15 மணிக்கும்,  அதிகாலை 2.10 மணிக்கு அபுதாபி செல்ல வேண்டிய எத்தியாட் விமானம் அதிகாலை 3.15 மணிக்கும், காலை 9.30 மணிக்கு அபுதாபி செல்ல வேண்டிய எத்தியாட் விமானம் காலை 10.25 மணிக்கும் புறப்பட்டு செல்லும் வகையில் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுயுள்ளது. 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்