தனி படை போலீசாரால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதி!!
அஜித் குமார் கொலை வழக்கில் 3 வது நபர்?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி குற்ற வழக்குகள் ஒன்றில் சந்தேகத்தின் பேரு தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
தனிப்படை போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
அஜித் குமார் விசாரணையின் போது தனிப்படை போலீசார் அவரது தம்பி நவீன் குமாரையும் பிடித்து வைத்து அடித்தனர்.. இதனால் அவரது நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் புகார் கொடுத்த பெண்ணின் காரை பார்க்கிங் செய்வதற்காக ஓட்டிச் சென்ற ஆட்டோ டிரைவர் வினோத் என்பவரையும் தனிப்படை போலீசார் பிடித்து அடித்தனர்.
தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டதில் அஜித் குமார் இறந்தார். அவரது தம்பி நவீன் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்று வீடு திரும்பினார்.
ஆட்டோ டிரைவரும் தனது முதுகு, கை, கால், தலை உட்பட பல இடங்களில் காயம் இருப்பதாக கூறி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.