திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயில் அமைச்சர்கள் சேகர் பாபு மூர்த்தி ஆய்வு செய்தனர்.
வரும் 14ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில்.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
நான் கோயிலுக்கு உட்பட்ட உப கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று முடிந்த நிலையில் வரும் 14ஆம் தேதி திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் கோயிலில் நேற்று திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யப்பிரியா பாலாஜி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முக சுந்தரம் உட்பட பலர் உடன் இருந்தனர்.