மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜூலை 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேகம்( குடமுழுக்கு) விழா நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷே கத்தில் பங்கேற்க மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சம் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தர உள்ளனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கையொட்டி ஜூலை 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய ஜூலை 19- ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைக் கண்ணன், மற்றும் விஸ்வ இந்து பரிஷத் மாநில துணைச்செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.