டெல்லியைச் சுற்றியுள்ள நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
டெல்லியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியைச் சுற்றியுள்ள நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9.04 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சில வினாடிகள் நீடித்தது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவானது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ஹரியாணாவின் குராவாரா பகுதியில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.