குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் இன்று காலை திடீரென பாலம் இடிந்து விழுந்ததில் வாகனங்கள் ஆற்றில் விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வதேரா மாவட்டத்தில் கம்பீரா பாலம் அமைந்துள்ளது. 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பாலத்தின் வழியே ஏராளமான வாகனங்கள் அன்றாடம் சென்று வருகின்றன. பாலத்திற்கு கீழே மாதி நதி ஓடுகிறது.
இந்த நிலையில் இன்று காலை பாலத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு லாரி மற்றும் கார் மாகி நதியில் விழுந்து மூழ்கியது. மற்றொரு வாகனம் பாலத்தில் தொங்கியபடியே நின்றது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததே இந்தப் பால விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.நதிக்குள் மூழ்கிய வாகனங்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.