விடுதலைப்போர் வீரன் மாவீரன் அழகுமுத்து கோன். அவர் 1710‑1759 காலத்தில் வாழ்ந்தார். ஆங்கிலேய அதிகாரத்துக்கு எதிரான எதிர்ப்பை முன்வைத்து உயிர்த்தியாகம் செய்த முதல் வீரர் ஆவார்.
1710‑இல் தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் பிறந்தவர். பாளையக்காரர்கள் மீது ஆங்கிலேயர் வரி வசூல் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து 1755‑ல் பெத்தநாயக்கனூரில் நடந்த படையில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்.
“அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட, சுதந்திர மனிதனாய் உயிர் விடுவோம்” இந்த கோஷத்தை முன்னெடுத்தவர். இதனால்
பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் கைதானார்.
248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டப்பட்டும் பின் ஆயிரக்கணக்கானோர் வெடிக்கப்பட்டும் கொல்லப்பட்டனர்.
வீரன் அழகுமுத்து கோனையும் 6 தளபதிகளையும் மார்பு மீது சுட்டு கொன்றனர் ஆங்கிலேயர்.
அவரது நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டி உள்ளது.
அவரது 315 ஆவது ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. யாதவா கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு வழக்கறிஞர்கள் கீர்த்தி பிரசன்னா, கார்த்திக், திருப்பாலை வெங்கடேசன் உட்பட பல வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழ்நாடு கோனார் மக்கள் நல இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் திருப்பதி தலைமையில் யாதவ கல்லூரியில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.