Hot News :
For Advertisement Contact: 9360777771

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

© News Today Tamil

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் 23 ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த்தும் கடந்த 26 ம் தேதி நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டனர்

இந்த வழக்கில் ஜாமீன் கோரி  நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீகாந்த் தரப்பில்,போதை பொருள் பயன்படுத்தியதாக, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல் எதிரி பிரதீப் குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் கைது  செய்யப்பட்டிருப்பதாகவும். ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப்பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என வாதம் வைக்கப்பட்டது.

நடிகர் கிருஷ்ணா தரப்பில், தன்னை கைது செய்தற்கான் காரணங்கள் ஏதும் தெரிவிக்காமல் காவல்துறை கைது செய்திருப்பதாகவும், தன்னிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என வாதம் வைக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில்,  பிரசாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் புழக்கம் குறித்து தெரிய வந்ததாகவும், அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், முதல் எதிரி பிரவீன் குமாரும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் ஜூன் 23 ம் தேதியும், கிருஷ்ணா ஜூன் 26 ம் தேதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது..

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் எனவும் ,

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில்  ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

.

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post அதிர்ச்சி... குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி!
Next Post மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
Related Posts