பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 19 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக 19 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சிங்கபெருமாள் கோயில் யார்டில் இன்று (ஜூலை 11) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இதனால் சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 9.02, 9.51, 10.56 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில்கள் சிங்கபெருமாள் கோவில் வரை மட்டும் இயக்கப்படும். காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும்.
மேலும் செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55, 10.40, 11.30, பகல் 12, பிற்பகல் 1.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். அதே நேரத்தில் காட்டாங்குளத்தூரில் இருந்து சென்னை கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.13 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
காட்டாங்குளத்தூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.46, 11, 11.20, பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். செங்கல்பட்டில் இருந்து காலை 11.30 மணி, பகல் 1.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.