Hot News :
For Advertisement Contact: 9360777771

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... 20 சதவீத போனஸ் அறிவிப்பு

© News Today Tamil

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும். மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை போனஸ் பெறுவார்கள். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன்.

வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

பல்வேறு கூட்டுறவு அமைப்பு, நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணை தனியே வெளியிடப்படும். நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணை தொகை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... 20 சதவீத போனஸ் அறிவிப்பு
Next Post தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... 20 சதவீத போனஸ் அறிவிப்பு
Related Posts