கர்நாடகாவில் உள்ள பீஜாப்பூரில் நக்சலைட்டுகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இங்குள்ள பீஜாப்பூரில் தலைமறைவாகியுள்ள நக்சலைட்டுகள் குறித்து தகவல் தெரிவித்தால் பல லட்ச ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், நக்சலைட்டுகளை பெரும் சதித்திட்டம் பீஜாப்பூரில் முறியடிக்கப்பட்டுள்ளது.
பீஜாப்பூர் உள்ள வனப்பகுதியில் ஏராளமான ஆயுதங்களை நக்சல்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 51 கையெறி குண்டுகள், 100 பண்டல் அலுமினியம் வயர், 50 ஸ்டீல் பைப்புகள், 40 இரும்பு தகடுகள், 20 இரும்பு ஷீட்டுகள் போன்றவற்றை உள்ளன. இவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதிக சக்தி கொண்ட வெடிக்கும் திறன் கொண்ட வெடிகுண்டுகள் பூமியில் புதைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.
பாதுகாப்பு படையினரை குறிவைத்தே இந்த ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பெரும் நாச வேலைக்கு பயன்படுத்த நக்சல்கள் திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறினர்.