டெல்லியில் உள்ள எம்.பிக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென தீ பிடித்துள்ளது. தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் பி.டி.மார்க்கில் கடந்த 2020-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அடுக்குமாடிகுடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மாநிலங்களவை உறுப்பினர்கள் வசிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்பாகும்.
இந்த குடியிருப்பு வளாகத்தின் மேல்தளங்களில் திடீரென இன்று தீ பிடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அங்கு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




