Hot News :

கரூர் துயரம்... பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் சந்தித்த விஜய்

© News Today Tamil

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓடூடலில் தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்து வருகிறார். 

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி நடிகர் விஜய்  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்  உயிரிழந்தனர்.

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று நள்ளிரவில் சென்னையில் இருந்து கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஸ்டாலின், சீமான், திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் செப்டம்பர் 28-ம் தேதி கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நேரில் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், கரூர் செல்வதற்கு விஜய் விதித்த கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கூறினார். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் தவெக சார்பில் வரவு வைக்கப்பட்டது. 

இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய் விரைவில் அவர்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார்.இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜய்யின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். கரூரில் பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தினர் நேற்று மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர்.

மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் நட்த்திர ஓட்டலில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். கரூர் சம்பவம் நடந்து ஒரு மாதம் முடிந்த நிலையில், விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காது, அவர் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post கரூர் துயரம்... பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் சந்தித்த விஜய்
Next Post கரூர் துயரம்... பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் சந்தித்த விஜய்
Related Posts