காது வலி காரணமாக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
திமுக பொதுச்செயலாளராக இருப்பவர் துரைமுருகன்(87). தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சராக உள்ள இவருக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காதில் அவருக்கு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பல்நோக்கு மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. வயது மூப்பு காரணமாக ஏற்படும் பாதிப்பு என்று கூறிய டாக்டர்கள், துரைமுருகன் தற்போது நலமாக இருப்பதாக கூறினர். அத்துடன் அவர் இன்று வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




