இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவில் இருந்து கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இருந்ததால் கட்சி விதிகளை மீறியதாக கூறி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அப்போது எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ”தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுகவின் பிரிவு, உண்மையான அதிமுக அல்ல. அதிமுக கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க அவகாசம் தேவை.” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.




