Hot News :

டெல்லி குண்டு வெடிப்பு: 25 இடங்களில் ஈ.டி சோதனை

© News Today Tamil

டெல்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய அல்-ஃபலா தொடர்புடைய 25  இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே நவம்பர் 10-ம் தேதி கார் குண்டு வெடித்து சிதறியது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 24-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என தேசிய புலனாய்வு முகமை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் படித்த அல்-ஃபலா பல்கலைக்கழகத்திலும் சோதனையைத் தீவிரப் படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் டெல்லி மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலைமுதலே சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன் இதில் தொடர்புடைய நபர்களிடைம் விசாரணை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post ஷேக் ஹசீனா செய்தது மனித குலத்திற்கு எதிரானது: சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் அறிவிப்பு
Next Post டெல்லியில் டிரோன் தாக்குதல் நடத்த சதித்திட்டம்
Related Posts