ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிமருந்து வெடித்து சிதறி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லியில் நவம்பர் 10 அன்று செங்கோட்டை அருகே காரில் குண்டு வெடித்து 13 பேர் உயிரிழந்தனர். மேலும 24 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஹரியாணாவில் உள்ள பரிதாஃபாத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக புல்வாமாவை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஹரியாணாவில் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனை நேற்று நள்ளிரவு போலீஸ் அதிகாரிகள், தடவியல் நிபுணர் குழு ஆய்யு செய்து கொண்டிருந்தபோது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




