Hot News :

விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு: இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு

© News Today Tamil

விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 320 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி நடக்கிறது. இதானால் எங்கள் விமான சேவைகளில் தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

விமானக் குழு முழுவதும் இந்த கோளாறு சரி செய்யப்படும் வரை பயணிகளுக்கு ஏற்படக்கூடிய ஏதேனும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.  வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் எங்களது வெப்சைட்டில் தங்கள் விமான நிலையைச் சரிபார்த்து, மேலும் உதவிக்கு 011-69329333, 011-69329999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இண்டிகோ விமான நிறுவனமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "எப்போதும் பாதுகாப்புதான் முதலில் முக்கியம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில விமானங்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படாலாம். உங்களுக்கு உதவ எங்கள் குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் எங்கள் வைப்சைட்டில் விமானங்கள் புறப்படும் நேரத்தை சரிபார்த்து கொள்ளுங்கள். உங்கள் பொறுமைக்கும், எங்கள் மீதான நம்பிக்கைக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post பயங்கர ஆயுதங்களுடன் நக்சலைட்டுகள் 11பேர் சரண்
Next Post அதிகாலை விபத்து- ஆந்திராவில் 5 பேர் பலி
Related Posts