அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. அவரை தவெக நிர்வாகிகள் சந்தித்து பேசியது அந்த ஊகங்களை உறுதிப்படுத்த ஆரம்பித்தன. இந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் பனையூரில் உள்ள அலுவலத்தில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார். அவரையடுத்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்.
இந்த சூழலில் செங்கோட்டையனுக்கு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.




