மதுரையில் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கடந்த 2023-ம் ஆண்டு சிறப்பு படை காவலராக பணியில் சேர்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் மகாலிங்கம் நேற்று ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது தனது தற்கொலைக்குக் காரணம் யாரும் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்தது தெரிய வந்தது. உயர்நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




