காணாமல் போன கார் டிரைவர் தலை இல்லாத முண்டமாக கண்டெடுப்பு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரிய உலக அணியை சேர்ந்தவர் மணி, வயது 26.
இவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக இவரை காணவில்லை. ஐயா அவரது பெற்றோர் கூட கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கொக்குளம் அருகே தலை இல்லாத உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அது காணாமல் போன மணியின் உடல் என்பது தெரியவந்தது. அவரது தலையை தேடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




