“மதுரையில் பாண்டியர் அரசு முத்திரை வெளியீடு – அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் முன்னெடுப்பு”
பாண்டிய மன்னர்களின் சிறப்பையும், தமிழர் ஆட்சிமுறையின் பெருமையையும் நினைவு கூறும் வகையில், அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் செ. விஜயகுமார்(மேனாள் தடய அறிவியல் இயக்குனர்) பாண்டியர்கால அரசு முத்திரையை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் மணிகண்டன், சுரேந்தர், காளீஸ்வரன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் அடையாளமாக விளங்கிய அரச முத்திரையை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவது, தமிழர் வரலாற்றின் மறக்க முடியாத ஒரு பக்கத்தை மீட்டெடுக்கும் பணியாகும்.
“பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு தொடர்ந்து பாண்டியர்களின் சின்னங்கள் மற்றும் அடையாளங்களை மீட்டெடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட செங்கோல் மற்றும் இரட்டை மீன் சின்னம் பற்றிய விழாவும் அதற்குச் சிறந்த உதாரணம்.
இத்தகைய பணிகளின் மூலம் பாண்டியர் வரலாற்றை மீண்டும் மக்களிடையே கொண்டு வருவதில் குழுவின் பங்களிப்பு பெருமையாகும். விரைவில் பாண்டியர் அருங்காட்சியம் மற்றும் அதற்கான இணையதளம் (Website) தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் விஜயகுமார் கூறினார்.
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவின் தலைமை ஆய்வாளர் மணிகண்டன் அவர்கள் பேசியபோது,
“அனைத்து மறவர் நல கூட்டமைப்பும், அனைத்து முக்குலத்தோர் நல கூட்டமைப்பும் எங்கள் பணிக்கு உறுதுணையாக செயல்படுகின்றன. பொதுச் செயலாளர் செ. விஜயகுமார் ஐயா அவர்கள் தனிப்பட்ட ஆர்வத்துடன் பாண்டியர் வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் பங்களித்து வருகிறார். அவரின் வழிகாட்டுதலால் விரைவில் பாண்டியர் வரலாற்றை முழுமையடையச் செய்வோம்,” என்றார்.
மேலும், “பல கோவில்களில் பாண்டிய மன்னர்களின் சிலைகள் தற்போது பராமரிக்கப்படாமல் உள்ளன. அவற்றை அரசாங்கம் உடனடியாக பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அந்த சின்னங்கள் பாண்டியர் ஆட்சியின் வரலாற்று சான்றுகள் என்பதால், அவை இழக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” எனவும் மணிகண்டன் வலியுறுத்தினார்.




