மதுரை சிந்தாமணி கிராண்ட் ஹோட்டலில் ஜெர்மனி, ஹாலந்து, ஸ்வீடன் வெளிநாட்டினர் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி
மதுரை சிந்தாமணி GRT கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற கேக் திருவிழா நிகழ்ச்சியில் ஜெர்மனி ஸ்வீடன் இத்தாலி நாட்டினர் பங்கேற்பு , கருணை இல்ல மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடலை பாடி வரவேற்றனர்.
ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி மதுரையில் கிறிஸ்மஸ் மற்றும் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தயாராகும் 300 கிலோ பிரம்மாண்ட கேக் - 80 kg எடையுள்ள ப்ரூம்ஸ், திராட்சை, செர்ரி, வால்நட், பிஸ்தா, முந்திரி, பேரிச்சை உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்களுடன் உயர்ரக மதுபானங்களில் கலவையாக சேர்க்கப்பட்டு 30 நாட்கள் பதப்படுத்த தயார் செய்யப்பட்டது. பின்பு 30 நாள் கழித்து அந்தப் பதப்படுத்தப்பட்டுள்ள உயர் பழங்கள் பிரமாண்டமான 300 கிலோ எடை கேக்குடன் கலந்து சேர்க்கப்படும்.
ஜி ஆர் டி கிராண்ட் ஹோட்டல் சமையல் கலைஞர்கள் ஜெர்மனி, இத்தாலி, கவிடன் நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் உலர் பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்களை கலந்து கிறிஸ்மஸ் ஸ்மஸ் பாடல் பாடி சேகரித்தனர் .
கேக் தயாரிக்கும் நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக கிறிஸ்மஸ் மரம் கருணை இல்ல குழந்தைகளின் மூலம் செடிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டு மின்விளக்கு ஏற்றப்பட்டது .
300 கிலோ எடையில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் கேக் கிறிஸ்மஸ் பண்டிகை தினம் மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என GRT கிராண்ட்பொது மேலாளர் இளங்கோ ராஜேந்திரன் கூறினார்.




