தமிழ்நாடில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி இன்று (நவ.4) தொடங்குகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையுடன் அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர்கள் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.




