சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, சைதாப்பேட்டை, கே.கே.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கே.கே.நகரில் சேட் என்ற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது. கோடம்பாக்கத்தில் சுகாலி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




