மகாராஷ்டிராவில் 11 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து விடடு போலீஸாரிடம் சரணடைந்தனர்.
இந்தியா 2026 மார்ச் மாத இறுதிக்குள் நக்சலைட்டுகள் இல்லாத தேசமாக மாற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அறிவித்துள்ளனர். இதனையடுத்து மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு எதிரான வேட்டை இந்தியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நக்சலைட்டுகள், தங்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பாதுகாப்பு படை மற்றும் போலீஸாரிடம் சரணடைந்து வருகின்றனர்.
அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் 11 நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 89 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




