Hot News :

வருமான வரித்துறை அதிரடி- 25 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்

© News Today Tamil

வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விவரங்களை தெரிவிக்காத 25 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் கடந்த  நிதி ஆண்டுக்கான வருமான வரித்தாக்கல் தொடர்பான விசாரணையில், 25 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் அதிக ரிஸ்க் உடையவர்கள் என வகைபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அதிக ரிஸ்க் உடைய நபர்கள், தகவல்களை தானாகப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பியதன் அடிப்படையில்  டிசம்பர் 31-ம் தேதிக்குள் திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்யும்படிஅறிவுறுத்தப்படும். தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் நடுப்பகுதியில் இருந்து, மற்றவர்களுக்கும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post புயலால் ரயில்கள் நிறுத்தம்- ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
Next Post டிட்வா புயல்... நாகை, பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Related Posts