ஆந்திராவில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோடேகல் கிராமத்தில் இன்று (நவம்பர் 29) அதிகாலை 4.30 மணியளவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கார்களும் நொறுங்கின. இந்த தகவல் அறிந்த போலீஸார், அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடடனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் விபத்து பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது உயிரிழந்த 5 பேரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..




