Hot News :

காஞ்சிபுரத்தில் விஜய் ஆட்டம் நாளை மீண்டும் ஆரம்பம்!

© News Today Tamil

காஞ்சிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நாளை(நவம்பர் 23) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இதுகுறித்து தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (நவம்பர்,23)காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கட்சியினரும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post திமுகவுடன் பேச காங்கிரஸ் குழு அமைப்பு- ப.சிதம்பரம் ரியாக்சன்
Next Post சேலத்தில் பயங்கரம்- திமுக செயலாளர் சுட்டுக்கொலை
Related Posts