டெல்லியில் அகில இந்திய தலைவர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசுகிறார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் கூட்டணி, பிரசாரம் உள்ளிட்டவற்றை அனைத்து கட்சிகளும் திட்டமிட்டு பணிகளை முடுக்கி விடடுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார்.
அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயிந்த் பாண்டா ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜக சார்பில் குழு அமைப்பது குறித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது தொகுதிகள், எத்தனை இடங்கள், கூட்டணி நிலவரம், பிரசார கூட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.




