ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்று மோடி எனக்கு உறுதியளித்துள்ளார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்தது. இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், " ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிச்சயமாக நிறுத்தும். பிரதமர் மோடி என்னுடைய நண்பர். எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
எனவே, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். அதே போல சீனாவையும் அதே காரியத்தை நாம் செய்ய வைக்க வேண்டும்." என்றார். இந்த நிலையில், ரஷயாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதித்ததை சுட்டிக்காட்டி டிரம்பை கண்டு மோடி அஞ்சுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.