Hot News :

தீபாவளி கொண்டாட நல்ல நேரம்....

© News Today Tamil

தீபாவளி கொண்டாட நல்ல நேரம்....


தீபாவளி 2025 பற்றிய ஒரு கட்டுரை

இந்தியாவில் கொண்டாடப்படும் பெரும்பாலான பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்கள், ஆங்கிலத் தேதியின் படி ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் வராது. 

பஞ்சாங்கத்தில் உள்ள மாதப்பிறப்பு, மற்றும் திதிகளின் அடிப்படையில் தான் கொண்டாடப்படுகிறது. ஆங்கில தேதியும், ஆங்கில நாள்காட்டியும் நம்முடைய வசதிக்கு மற்றும் அன்றாட பழக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்துகிறோமே, தவிர...

பண்டிகைகள் எல்லாமே நல்ல நாள், நட்சத்திரம், திதி ஆகியவற்றின் அடிப்படையில் தான் இப்போது வரை பின்பற்றப்படுகிறது. இந்த பழக்கமே, சில பெரிய பண்டிகைகள் எந்த நாளில் வருகிறது என்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம். தீபாவளி 2025, எந்த நாளில் வருகிறது என்ற குழப்பம் எழுந்துள்ளது.

எப்பொழுதுமே தீபாவளிப் பண்டிகை அமாவாசை நாளில் தான் கொண்டாடப்படும். ஆனால், இந்த ஆண்டு, 2025 தீபாவளி அக்டோபர் 20ஆம் தேதி வருகிறது, ஆனால், 20ஆம் தேதி மாலை தான் அமாவாசை திதி பிறக்கிறது! 

ஐப்பசி மாத அமாவாசை அக்டோபர் 21 அன்று வருகிறது என்பதால் இந்த தீபாவளி அக்டோபர் 20 அன்று என்று கொண்டாடப்பட வேண்டுமா? அல்லது அக்டோபர் 21, அமாவாசை அன்று கொண்டாடப்பட வேண்டுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. 

ஏனெனில் விடிய விடிய தீபாவளி விடிந்து போனால் அமாவாசை இன்று முன்னோர்கள் சொல்வார்கள் நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் 

ஐப்பசி மாத அமாவாசை அக்டோபர் 20 மாலை 4:14 மணிக்கு மேல் பிறக்கிறது. அக்டோபர் 21 மாலை 5:38 வரை நீடிக்கிறது. தீபாவளியும் அமாவாசை அன்று கொண்டாடப்படுவதால் செவ்வாய்க்கிழமை தான் தீபாவளி கொண்டாட வேண்டுமா என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது

அமாவாசை திதி எந்த இரவில் வருகிறதோ அன்றைய பகல் பொழுதில் தான் பண்டிகையாக கொண்டாடப்பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. 

தீபாவளிக்கு மட்டுமல்லாமல் திதிகளை பொறுத்த அளவுக்கு....

*முழு இரவுக்கு முன்பகல் என்பதுதான் கணக்கு.*

அன்றைய நாள் திதி மதியானத்துக்கு மேல் வந்தாலும்... அன்றைய சூரிய உதயத்திற்குப் பிறகு, திதி கணக்கு முழுவதுமாக எடுத்து... தெய்வ வழிபாடுகள் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்.

எனவே அக்டோபர் 20 மாலை அமாவாசை திதி துவங்கினாலும் அன்றைய திங்கட்கிழமை அன்றுதான் தீபாவளி கொண்டாடப்படனும். அதாவது ஞாயிற்றுக்கிழமை இரவு விடிந்தால் திங்கட்கிழமை.


*தீபாவளி நல்ல நேரம்..*.

கங்கா ஸ்நானம்

 04-00 Am முதல் 05-30 Am வரை

புத்தாடை உடுத்த நல்ல நேரம்


~ 06-00 Am முதல் 07-15 am வரை

~ 09-00 Am முதல் 10-15 Am வரை

ஸ்ரீலஷ்மிகுபேர பூஜை செய்ய

06-00 Pm முதல் 08-00 Pm வரை

அதுவும் இந்ததீபாவளி

திங்கட்கிழமை, சந்திரனுடைய அஸ்தம் நட்சத்திரத்தில் வரும் தீபாவளி யானது....

*சிவனின் முழுமையான அருள் தரும் பண்டிகை.*

இந்த தீபாவளி சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமை அன்று, சந்திரன் நட்சத்திரத்தில் வருவது மிகச் சிறப்பானதாகும். 

ஈசனையும், அம்பிகையையும் வழிபடுவது, இருவரையும் பூஜிப்பது, வற்றாத செல்வம் பெற உதவும் என்பது ஐதீகம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

வாடிப்பட்டி வாரியார் 

ஜோதிட கலாநிதி 

வாஸ்து ஜோதிடர் 

கோபிக்குமார் 

+91 98421 54396

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post டெல்லியில் பரபரப்பு... எம்.பிக்கள் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
Next Post வங்க கடலில் உருவானது புயல் சின்னம்!
Related Posts